சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் திடீர் ஓய்வு!
ஷேன் டவ்ரிச் இங்கிலாந்துக்கு எதிராக நாளை மறுதினம் ( டிசம்பர் 3) தொடங்கவுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
பார்படாஸ்,
வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (3ஆம் தேதி) நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஷேன் டவ்ரிச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
32 வயதான ஷேன் டவ்ரிச் 2015ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை மொத்தம் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக 2020ல் டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார். இதுவரை 1 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். நாளை மறுதினம் தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றிருந்த நிலையில் திடீரென ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.