ஐ.சி.சி-யின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்


ஐ.சி.சி-யின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 13 Feb 2024 11:04 AM GMT (Updated: 13 Feb 2024 11:29 AM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது.

அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், இங்கிலாந்தின் ஆலி போப் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் இளம் வீரரான ஷமார் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அதேபோல் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு அயர்லாந்தின் ஏமி ஹண்டர் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான பெத் மூனி, அலிசா ஹீலி ஆகியோர் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை யார் வென்றார்கள் என ஐ.சி.சி தற்போது அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெஸ்ட் இண்டீசின் இளம் வீரரான ஷமார் ஜோசப் வென்றுள்ளார். மேலும், சிறந்த வீராங்கை விருதை அயர்லாந்தின் ஏமி ஹண்டர் வென்றுள்ளார்.


Next Story