கேஎல் ராகுலை ட்ரோல் செய்யும்போது அவரை விட எனக்கு மிகவும் வலிக்கிறது - சுனில் ஷெட்டி


கேஎல் ராகுலை ட்ரோல் செய்யும்போது அவரை விட எனக்கு மிகவும் வலிக்கிறது - சுனில் ஷெட்டி
x
தினத்தந்தி 13 Dec 2023 1:59 PM IST (Updated: 13 Dec 2023 2:02 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியாவுக்கும், கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலுக்கும் இடையே கடந்த ஜனவரி 23-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

புனே,

இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர் சுனில் ஷெட்டி. இவருடைய மகள் நடிகை அதியா ஷெட்டி.

அதியாவுக்கும், கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்கும் இடையே கடந்த ஜனவரி 23-ந்தேதி சுனில் ஷெட்டியின் பண்ணை இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. அதில், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், சுனில் ஷெட்டியிடம் பேட்டி ஒன்றில் உங்களுடைய மருமகன் கேஎல் ராகுலை மக்கள் ட்ரோல் செய்யும்போது உங்களுக்கு எவ்வாறு இருக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'கேஎல் ராகுல் மற்றும் அதியாவை விட எனக்கு மிகவும் வலிக்கிறது' என்று பதிலளித்தார்.


Next Story