'டெஸ்ட் கேப்டன் பதவியை கோலிக்கு ஏன் மீண்டும் வழங்கக்கூடாது?' - தேர்வுக்குழு முன்னாள் தலைவர்...!!


டெஸ்ட் கேப்டன் பதவியை கோலிக்கு ஏன் மீண்டும் வழங்கக்கூடாது? - தேர்வுக்குழு முன்னாள்  தலைவர்...!!
x

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி குறித்து இந்திய தேர்வுக்குழு முன்னாள் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் அவரது செயல்பாடுகள் சமீப காலமாக பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீரர்கள் தேர்வு, அணியை நடத்திய விதமும் பெரும் விவாதமாக மாறியது.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டன் பதவி குறித்த விவாதம் நடந்து வரும் நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் ஷர்மா டெஸ்ட் கேப்டன் பதவியை வரவிருக்கும் ஆண்டுகளில் தக்க வைத்துக் கொள்வாரா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் 'இந்த கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. தேர்வாளர்களின் மனநிலை எனக்கு தெரியாது. தேர்வாளர்களின் மனநிலை இனி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து இருக்க வேண்டும், அது தெளிவான மனநிலையாக இருக்க வேண்டும்'என்று கூறினார்.

மேலும் அவரிடம் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இளம் வீரர் ஒருவர் டெஸ்ட் கேப்டனாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, "ஏன் விராட் கோலி இல்லை? அஜிங்க்யா ரஹானே மீண்டும் வந்து துணை கேப்டனாக முடியும் போது, விராட் கோலி ஏன் கேப்டனாக முடியாது? கேப்டன் பதவியில் விராட்டின் மனநிலை என்ன என்று தெரியவில்லை. தேர்வாளர்கள் ரோஹித்தை மீறி யோசித்தால், விராட் கோலியும் ஒரு தேர்வாக இருக்க முடியும்' என்று நான் நினைக்கிறேன் என்று பதிலளித்தார்.

ரிஷப் பந்த் எதிர்கால கேப்டனாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் எம்.எஸ்.கே பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. . .

" அவர் திரும்பி வரட்டும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை ரிஷப் பன்ட் செய்துள்ளார். , இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மண்ணில் எந்த விக்கெட் கீப்பரும் சதம் அடித்ததில்லை. இது சாத்தியம், அது சாத்தியம் என்று இப்போது பேச தேவையில்லை' என்று எம்எஸ்கே பிரசாத் கூறினார்.


Next Story