ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே - கடைசி டி20 போட்டியில் வங்காளதேசத்துடன் இன்று மோதல்


ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே - கடைசி டி20 போட்டியில் வங்காளதேசத்துடன் இன்று மோதல்
x

image courtesy: @BCBtigers

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

டாக்கா,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் அந்த நான்கு ஆட்டங்களிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 4-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் வங்காளதேசமும், ஆறுதல் வெற்றி பெற ஜிம்பாப்வேவும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story