காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய வில்லியம்சன் தாயகம் திரும்பினார்


காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய வில்லியம்சன் தாயகம் திரும்பினார்
x

ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய நிலையில் வில்லியம்சன் நேற்று தாயகம் திரும்பினார்.

வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். சென்னைக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் எல்லைக்கோட்டில் பந்தை துள்ளி தடுக்க முற்பட்டபோது கீழே விழுந்ததில் வலது கால்முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் நடையை கட்டிய அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் வில்லியம்சன் நேற்று தாயகம் திரும்பினார். வலதுகாலில் கட்டு போட்டநிலையில் கம்பூன்றியபடி அவர் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் காட்சி வைரலாகியுள்ளது.

அவர் வீடியோ பதிவில் 'தற்போது காலில் வலி அதிகமாக இல்லை. துரதிர்ஷ்டவசமாக இது குறுகிய கால பயணமாக அமைந்து விட்டது. ஆனால் குறைந்த நாட்களே இருந்தாலும் குஜராத் அணியினருடன் உற்சாகமாக நேரத்தை செலவிட்டேன். அணியினரை தவறவிடுவது வேதனை அளிக்கிறது. இந்த சீசனில் அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.


Next Story