தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி... டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி... டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?
x

image courtesy; ICC

2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது.

துபாய்,

2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது.

2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 1 போட்டி டிரா ஆனது. அதன் பின்னர் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதனையடுத்து நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் முடிவை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய அணி முதல் இடத்திற்கு(54.16%) முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும் (50%), நியூசிலாந்து 3-வது இடத்திலும் (50%), ஆஸ்திரேலியா 4-வது இடத்திலும் (50%), வங்காளதேசம் 5-வது இடத்திலும், பாகிஸ்தான் 6-வது இடத்திலும் (45.83%), வெஸ்ட் இண்டீஸ் (16.67%) 7ம் இடத்திலும், இங்கிலாந்து (15%) 8ம் இடத்திலும், இலங்கை (0%) 9ம் இடத்திலும் உள்ளன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த பின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பெரும் சரிவை சந்தித்த இந்திய அணி தற்போது மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story