தென் ஆப்பிரிக்க தொடரில் குல்தீப் யாதவுக்கு பதிலாக அவரை விளையாட வைப்பதே புத்திசாலித்தனம் - ஜாகீர்கான்


தென் ஆப்பிரிக்க தொடரில் குல்தீப் யாதவுக்கு பதிலாக அவரை விளையாட வைப்பதே புத்திசாலித்தனம் - ஜாகீர்கான்
x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நேற்று நடைபெற இருந்த முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட விசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் குல்தீப் யாதவுக்கு பதிலாக பவர் பிளே ஓவர்களில் பந்து வீசக்கூடிய ரவி பிஷ்னோயை இத்தொடரில் முதன்மை ஸ்பின்னராக விளையாட வைப்பதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "ரவி பிஷ்னோய் இத்தொடரிலும் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். ஏனெனில் அது நமது அணிக்கு வலுவை சேர்க்கும். ஒருவேளை குல்தீப் யாதவை தேர்வு செய்தால் அவர் பவர் பிளே ஓவர்களில் பெரும்பாலும் பந்து வீச மாட்டார். எனவே ரவி பிஷ்னோயை தேர்ந்தெடுப்பது சிறந்த சிந்தனை செயல்முறையாக இருக்கும்" என்று கூறினார்.


Next Story