அவர் இல்லையென்றால் இந்தியாவின் பவுலிங் ஜீரோதான் - பாக். முன்னாள் வீரர் விமர்சனம்


அவர் இல்லையென்றால் இந்தியாவின் பவுலிங் ஜீரோதான் - பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
x

image courtesy: AFP

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது.

கராச்சி,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

ஒருநாள் தொடரில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கையின் ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா இல்லையென்றால் இந்திய அணியின் பவுலிங் ஜீரோ என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜுனைத் கான் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு":- "பும்ரா இல்லாமல் இந்தியாவின் பவுலிங் ஜீரோ என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?" என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story