பெண்கள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20-ல் இங்கிலாந்து அணி வெற்றி


பெண்கள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20-ல் இங்கிலாந்து அணி வெற்றி
x

தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்த இலக்கை இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் கடந்து வெற்றிபெற்றது.

வோர்செஸ்டர்,

தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக விளையாடு வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை அன்னிக் போஸ்க் 61 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீராங்கணைகள் உட்பட அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அதிகபட்சமாக கேப்டன் நடாலி ஸ்சிவர் 47 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களிலேயே இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

1 More update

Next Story