பெண்கள் கிரிக்கெட்; இந்தியா-இலங்கை இடையிலான முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடக்கம்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
கொழும்பு,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது.
இதன்படி இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது. இலங்கையில் உள்ள தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






