மகளிர் கிரிக்கெட்; முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்..!


மகளிர் கிரிக்கெட்; முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்..!
x

Image Courtesy: @BCCIWomen

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

மும்பை,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நாளை முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணியினர் விளையாடுவர்.

அதே வேளையில் ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணியினரும் கடுமையாக போராடுவர். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story