மகளிர் கிரிக்கெட்; இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்..!


மகளிர் கிரிக்கெட்; இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்..!
x

image courtesy; twitter / @ICC

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

மும்பை,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இதில் முதலாவதாக டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைப்பற்றிய இந்திய அணி அதே வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கும்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story