மகளிர் கிரிக்கெட்; ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்..!


மகளிர் கிரிக்கெட்; ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்..!
x

Image Courtesy: @BCCIWomen

தினத்தந்தி 2 Jan 2024 12:31 AM GMT (Updated: 2 Jan 2024 5:28 AM GMT)

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

மும்பை,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகளின் முடிவில் 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெற உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும், ஆறுதல் வெற்றிக்காக இந்தியாவும் போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story