பெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி - குஜராத் அணிகள் இன்று மோதல்


பெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி - குஜராத் அணிகள் இன்று மோதல்
x

இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

டெல்லி அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டது . அதேவேளையில் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இருப்பினும் ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்க குஜராத் அணி தீவிரம் காட்டும்.


Next Story