மகளிர் பிரீமியர் லீக்: மும்பையின் வெற்றிக்கு 106 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி அணி


மகளிர் பிரீமியர் லீக்: மும்பையின் வெற்றிக்கு 106 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி அணி
x

டெல்லி அணி 18 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி மும்பை, நவி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். `லீக்' முடிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியிலும், 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் ஆடும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

மும்பை அணியின் அபார பந்துவீச்சால் டெல்லி அணி தொடக்கம் முதலே ரன்குவிக்க தவறியது. அத்துடன் விக்கெட்டுகளையும் சீரான வேகத்தில் இழந்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் மெக் லானிங் 43 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் டெல்லி அணி 18 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.


Next Story