பெண்கள் பிரீமியர் லீக்; எல்லிஸ் பெர்ரி அபார பந்துவீச்சு... மும்பை அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


பெண்கள் பிரீமியர் லீக்; எல்லிஸ் பெர்ரி அபார பந்துவீச்சு... மும்பை அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
x

பெங்களூரு அணியில் சிறப்பாக பந்துவீசிய எல்லிஸ் பெர்ரி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 19 ஓவர்கள் முடிவில் அந்த அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சஜீவன் சஜனா 30 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியில் சிறப்பாக பந்துவீசிய எல்லிஸ் பெர்ரி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 114 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடுகிறது.


Next Story