பெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் பேட்டிங் தேர்வு


பெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத்  பேட்டிங் தேர்வு
x

டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி பேட்டிங்கை தேர்வு செய்தார்

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றன .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

டெல்லி அணி;

மெக் லானிங் (கேப்டன் ), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்ஸி, மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், தனியா பாட்டியா, மின்னு மணி.

குஜராத் அணி;

லாரா வால்வார்ட், பெத் மூனி (கேப்டன் ), தயாளன் ஹேமலதா, லிட்ச்பீல்ட், ஆஷ்லே கார்ட்னர், பார்தி ஃபுல்மாலி, கேத்ரின் பிரைஸ், தனுஜா கன்வர், ஷப்னம் ஷகில், மேக்னா சிங், மன்னத் காஷ்யப்.


Next Story