பெண்கள் பிரீமியர் லீக்: ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி... பெங்களூர் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த டெல்லி


பெண்கள் பிரீமியர் லீக்: ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி... பெங்களூர் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த டெல்லி
x

image courtesy; twitter/@wplt20

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி பெங்களூர் பந்து வீச்சை திறம்பட சமாளித்து ரன்களை குவித்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். பெங்களூரு அணி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி பெங்களூரு பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story