பெண்கள் பிரிமீயர் லீக்: வெளியேற்றுதல் சுற்று - டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு


பெண்கள் பிரிமீயர் லீக்: வெளியேற்றுதல் சுற்று - டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு
x

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கை தேர்வு செய்தார்

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடைசி இரு இடத்துக்கு தள்ளப்பட்ட உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெளியேறின.2-வது, 3-வது இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் வெளியேற்றுதல் சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி , பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

மும்பை:

ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா , நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன் ), அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், எஸ் சஜனா, ஹுமைரா காசி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

பெங்களூரு:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன் ), சோஃபி மோலினக்ஸ், எலிஸ் பெர்ரி, சோஃபி டெவின், ரிச்சா கோஷ் , ஜார்ஜியா வேர்ஹாம், திஷா கசத், ஸ்ரேயங்கா பாட்டீல். சோபனா ஆஷா, ஷ்ரத்தா போகர்கர், ரேணுகா சிங்.


Next Story