மகளிர் பிரீமியர் லீக்; மும்பை அணியின் ஜெர்சி அறிமுகம்


மகளிர் பிரீமியர் லீக்; மும்பை அணியின் ஜெர்சி அறிமுகம்
x

இந்த தொடருக்கான மகளிர் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மும்பை,

வீரர்களுக்கு ஐபிஎல் போன்று வீராங்கனைகளுக்கு மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்க உள்ளது. மார்ச் 4-ம் தேதி மகளிர் பிரீமியர் லிக் தொடங்க உள்ளது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன.

5 அணிகளும் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் 951 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் இந்த தொடருக்கான மகளிர் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


Next Story