பெண்கள் பிரீமியர் லீக்: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு


பெண்கள் பிரீமியர் லீக்: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy: @wplt20

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போன்று பெண்களுக்கு பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது.

பெங்களூரு,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போன்று பெண்களுக்கு பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. மும்பையில் நடந்த முதலாவது போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த நிலையில் 2-வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. மார்ச் 17-ந் தேதி வரை நடைபெறும் இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் முதல் 11 லீக் ஆட்டங்கள் பெங்களூருவிலும், அடுத்த 9 லீக் ஆட்டங்கள் மற்றும் வெளியேற்றுதல் சுற்று, இறுதிப்போட்டி ஆகியவை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்திலும் அரங்கேறுகின்றன.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கடந்த ஆண்டு 2-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story