மகளிர் டி20 கிரிக்கெட்; இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்...!


மகளிர் டி20 கிரிக்கெட்; இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்...!
x

Image Courtesy: @BCCIWomen

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

மும்பை,

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கடந்த செப்டம்பரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்ற நிலையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிர முயற்சி காட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.


Next Story