உலகக்கோப்பை கிரிக்கெட்; அரையிறுதியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது அரையிறுதியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
மும்பை,
10 அணிகள் பங்கேற்ற 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்பட 6 அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச உள்ளது.
இரு அணிகளுக்கான 'பிளேயிங் 11' பின்வருமாறு;-
இந்தியா; ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
நியூசிலாந்து; டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டாம் லாதம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்