உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிசுற்று; ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து 281 ரன்கள் குவிப்பு...!
ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து அணி தரப்பில் டாக்ரெல் 91 ரன்கள் எடுத்தார்.
புலவாயோ,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிசுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடரில் இன்று நடைபெறும் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஓமன் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆண்டி மெக் பிரைன் மற்றும் ஸ்டிர்லிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மெக் பிரைன் 20 ரன், ஸ்டிர்லிங் 23 ரன் மற்றும் அடுத்து வந்த பால்பிர்னி 7 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து ஹாரி டெக்டர் மற்றும் டக்கர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டெக்டர் அரைசதம் அடித்தார். டெக்டர் 52 ரன்னிலும் டக்கர் 26 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய 91 ரன்கள் எடுத்து அணியின் ரன்னை உயர்த்தினார்.
இறுதியில் அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணி தரப்பில் டாக்ரெல் 91 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணியில் காஷ்யப் பிரஜாபதி, ஜதீந்தர் சிங் ஆகியோர் களம் இறங்கி ஆடி வருகின்றனர்.