உலகக்கோப்பை கிரிக்கெட்; 2வது வெற்றியை பதிவு செய்யுமா இங்கிலாந்து..? - நெதர்லாந்துடன் நாளை மோதல்...!


உலகக்கோப்பை கிரிக்கெட்; 2வது வெற்றியை பதிவு செய்யுமா இங்கிலாந்து..? - நெதர்லாந்துடன் நாளை மோதல்...!
x

Image Courtesy: AFP

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி நெதர்லாந்தை சந்திக்க உள்ளது. 7 ஆட்டங்களில் ஆடியுள்ள இங்கிலாந்து 1 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் உள்ளது.

அதேவேளையில் 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ள நெதர்லாந்து நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்புடன் விளையாடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.


Next Story