கான்பெடரேஷன் கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மெனி-சிலி பலப்பரிட்சை


கான்பெடரேஷன் கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மெனி-சிலி பலப்பரிட்சை
x
தினத்தந்தி 30 Jun 2017 6:43 AM GMT (Updated: 30 Jun 2017 6:43 AM GMT)

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மெனி மற்றும் சிலி அணிகள் மோத உள்ளன.

ரஷ்யா,

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் ரஷ்யா, ஜெர்மெனி, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் பங்குபெற்றுள்ளன. இப்போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்ம்ர்னி மற்றும் மெக்ஸிகோ அணிகள் மோதி கொண்டன. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெர்மெனியின் கோரெட்ஸ்கா முதல் பாதியின் 6 வது மட்டும் 8 வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்தார். முதல் பாதியின் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மெனி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெர்மெனி வீரர்கள் எதிரணியினரின் கோல் போடும் முயற்சிகளை தடுத்தனர். 59 வது நிமிடத்தில் ஜெர்மெனியின் வெர்னர் மற்றொரு கோல் அடித்தார். பின்னர் 89வது நிமிடத்தில் மெக்ஸிகோவின் ஃபபியன் சுமார் 35 மீட்டர் தூரத்தில் இருந்து கோல் அடித்து அசத்தினார். அதன்பின் 91 வது நிமிடத்தில் ஜெர்மெனியின் யூனஸ் மற்றொரு கோல் அடித்தார். முழு ஆட்டநேர முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மெனி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் சிலி அணி போர்ட்டுகலை வீழ்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.

வருகிற ஞாயிறு நடைபெற உள்ள இறுதி போட்டியில் ஜெர்ம்ர்னி மற்றும் சிலி அணிகள் மோத உள்ளன. மூன்றாம் இடத்திற்கான போட்டியில் போர்ட்டுகலும் மெக்ஸிகோவும் மோது கின்றன.

Next Story