ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் - இந்திய அணி தோல்வி


ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் - இந்திய அணி தோல்வி
x

Image Courtesy: @IndianFootball

ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் கால்பந்து தகுதி சுற்றில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

தாஷகென்டி,

விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டி தொடரான ஒலிம்பிக் தொடர் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் கால்பந்து தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த தகுதி சுற்று போட்டியின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதன் 'சி' பிரிவு லீக் ஆட்டங்கள் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷகென்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த தனது முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.

முதல் பாதியில் தற்காப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி பிறகு சரிவை சந்தித்தது. முடிவில் இந்திய அணி 0-7 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மறுநாள் வியட்நாமை சந்திக்கிறது.


Next Story