பிரேசில் கால்பந்து ஜாம்பவான் மரியோ சகால்லோ மறைவு - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு


பிரேசில் கால்பந்து ஜாம்பவான் மரியோ சகால்லோ மறைவு - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
x

அணி வீரராகவும், பயிற்சியாளராகவும் பிரேசில் அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு சகால்லோ முக்கிய பங்காற்றினார்.

பிரேசிலியா,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மரியோ சகால்லோ உயிரிழந்தார். அவருக்கு வயது 92. இவர் வீரராக மட்டுமின்றி திறமையான பயிற்சியாளராகவும் செயல்பட்டு பிரேசில் அணியை உச்சத்துக்கு அழைத்துச் சென்றவர் ஆவார்.

அணி வீரராக இரண்டு முறையும், பயிற்சியாளராக இரண்டு முறையும் பிரேசில் அணி கால்பந்து உலகக்கோப்பையை வெல்வதற்கு சகால்லோ முக்கிய பங்காற்றினார். கடந்த 1958 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்களில் பிரேசில் அணியின் மற்றொரு ஜாம்பவான் பீலேவுடன் இணைந்து விளையாடி அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

தொடர்ந்து 1970 மற்றும் 1994-ம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணியின் பயிற்சியாளராக சகால்லோ செயல்பட்டார். சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த சகால்லோ, கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி பிரேசில் நாட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா அறிவித்துள்ளார்.




Next Story