சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஜெர்மனி முன்னணி வீரர் ஓய்வு அறிவிப்பு

image courtesy: AFP
இவர் ஜெர்மனி அணிக்காக 124 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.
பெர்லின்,
ஜெர்மனி அணியின் முன்னணி கோல் கீப்பர் வீரரான மானுவல் நியூயர் (38 வயது) சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் ஜெர்மனி அணிக்கு 61 போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
2009-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் கால்பதித்த நியூயர், 2014-ம் ஆண்டு ஜெர்மனி அணி உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த உலகக் கோப்பையின் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த மாதம் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் காலிறுதி சுற்றில் ஸ்பெயின் அணியுடன் விளையாடியதே அவரது கடைசி சர்வதேச ஆட்டமாக அமைந்தது.
Related Tags :
Next Story






