இந்தியா-நேபாள பெண்கள் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி: சென்னையில் 15, 18-ந் தேதிகளில் நடக்கிறது..!


இந்தியா-நேபாள பெண்கள் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி: சென்னையில் 15, 18-ந் தேதிகளில் நடக்கிறது..!
x

கோப்புப்படம்

இந்தியா-நேபாள பெண்கள் அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 15, 18 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

சென்னை,

இந்தியா-நேபாள பெண்கள் அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 15, 18 ஆகிய தேதிகளில் நடக்கிறது. அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அனுமதியுடன் தமிழ்நாடு கால்பந்து சங்கம் இந்த போட்டியை நடத்துகிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் அரங்கேறுகிறது. அத்துடன் சர்வதேச பெண்கள் கால்பந்து போட்டி சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

இது குறித்து தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் பெண்கள் கமிட்டி தலைவர் சீனி முகைதீன் கூறுகையில், 'இந்தியா-நேபாள பெண்கள் அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. போட்டியை மாலையில் நடத்த முடிவு செய்துள்ளோம். இருப்பினும் போட்டி நடைபெறும் நேரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தொடக்க விழாவுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அழைக்க திட்டமிட்டு இருக்கிறோம்' என்றார்.


Next Story