ஐ.எஸ்.எல் கால்பந்து : மும்பை அணியில் இணைந்த சஞ்சீவ் ஸ்டாலின்

Image Tweeted By @MumbaiCityFC
சஞ்சீவ் மே 2026 வரை நான்கு வருடங்களுக்கு மும்பை அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. குறிப்பாக கேரளா பிளாஸ்டர்ஸ், சென்னையின் எப்.சி அணிகள் சமீப நாட்களாக வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் மும்பை சிட்டி எப்.சி அணி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் இருந்த டிபென்டர் சஞ்சீவ் ஸ்டாலினை தங்கள் அணிக்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது. 21 வயதான சஞ்சீவ் மே 2026 வரை நான்கு வருடங்களுக்கு மும்பை அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் மும்பை அணியில் இணைந்ததை அந்த அணி தங்கள் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






