ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 6 Dec 2023 9:45 PM GMT (Updated: 6 Dec 2023 9:45 PM GMT)

இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

ஜாம்ஷெட்பூர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி., ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் சென்னை அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 டிரா, 4 தோல்வி அடைந்துள்ளது. ஜாம்ஷெட்பூர் அணி 8 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 2 டிரா, 5 தோல்வியை சந்தித்துள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியதில் சென்னை அணி 5 ஆட்டங்களிலும், ஜாம்ஷெட்பூர் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. புள்ளிப்பட்டியலில் சென்னையின் எப்.சி 8 வது இடத்திலும், ஜாம்ஷெட்பூர் அணி 10 வது இடத்திலும் உள்ளன.



Next Story