ஐஎஸ்எல் கால்பந்து ; சென்னையின் எப்சி - கேரளா அணிகள் நாளை மோதல்


ஐஎஸ்எல் கால்பந்து ;  சென்னையின் எப்சி -  கேரளா அணிகள் நாளை மோதல்
x

Image Courtesy: Chennaiyin F.C

தினத்தந்தி 28 Nov 2023 9:39 AM GMT (Updated: 29 Nov 2023 9:15 AM GMT)

இடைவெளி முடிவடைந்து மீண்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கொண்டு கடந்த 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இடைவெளி விடப்பட்டது.

இந்நிலையில் இடைவெளி முடிவடைந்து மீண்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று ஓய்வு நாள் ஆகும். நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னையின் எப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோத உள்ளன.

புள்ளி பட்டியலில் கேரளா அணி 2வது இடத்திலும் , சென்னை அணி 7வது இடத்திலும் உள்ளன.


Next Story