ஐ.எஸ்.எல். கால்பந்து; பெங்களூரு-பஞ்சாப் இடையேயான ஆட்டம் டிரா!


ஐ.எஸ்.எல். கால்பந்து; பெங்களூரு-பஞ்சாப் இடையேயான ஆட்டம் டிரா!
x

image courtesy; twitter/ @IndSuperLeague

இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - ஒடிசா அணிகள் மோத உள்ளன.

பெங்களூரு,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கொண்டு கடந்த 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இடைவெளி விடப்பட்டது. இந்நிலையில் இடைவெளி முடிவடைந்து மீண்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு-பஞ்சாப் அணிகள் விளையாடின. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. பெங்களூரு அணி தரப்பில் ஹர்ஷ் பட்ரே, கர்டிஸ் மெயின், ஜாவி ஹெர்னாண்டஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பஞ்சாப் அணி தரப்பில் நிகில் பிரபு, டிமிட்ரியோஸ் சாட்ஸியாஸ், லூகா மஜ்சென் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - ஒடிசா அணிகள் மோத உள்ளன.


Next Story