ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்


ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்
x

பெங்களூருவில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

ஜாம்ஷெட்பூர்,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரர் கிளிடன் சில்வா அந்த அணியின் முதல் கோலை அடித்தார். இதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story