ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா அணிகள் மோதின.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story