ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை சிட்டி-ஐதராபாத் ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை சிட்டி-ஐதராபாத் ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-ஐதராபாத் அணிகள் மோதின.

மும்பை,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-ஐதராபாத் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை சிட்டி அணி சார்பில் ஜார்ஜ் ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஐதராபாத் அணி சார்பில் ஹிதேஷ் சர்மா ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story