ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட்-ஐதராபாத் ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட்-ஐதராபாத் ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

கவுகாத்தியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-ஐதராபாத் அணிகள் மோதின.

கவுகாத்தி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-ஐதராபாத் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் நிம் டோர்ஜி ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஐதராபாத் அணி சார்பில் பெட்டேரி ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.

இதையடுத்து நார்த் ஈஸ்ட் யுனைடெட்-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story