ஐ.எஸ்.எல். கால்பந்து; ஒடிசா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து; ஒடிசா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்
x

image courtesy; twitter/@IndSuperLeague

தினத்தந்தி 29 Feb 2024 4:42 AM GMT (Updated: 29 Feb 2024 5:07 AM GMT)

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை சிட்டி - கோவா இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

புவனேஸ்வர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை சிட்டி - கோவா இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்நிலையில் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ஒடிசா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடைபெற்று முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் ஒடிசா முதலிடத்திலும், ஈஸ்ட் பெங்கால் 8-வது இடத்திலும் உள்ளன.


Next Story