ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மோகன் பகான் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி..!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மோகன் பகான் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி..!
x

Image Courtesy: @IndSuperLeague

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கேரளா அணி ஆட்டம் தொடங்கிய முதல் 10 நிமிடத்திற்குள் கோல் அடித்து அசத்தியது. இதையடுத்து முதல் பாதி ஆட்டம் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணி முன்னிலை வகித்தது.

இதையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.


Next Story