ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; மோகன் பகான் - கோவா அணிகள் இன்று மோதல்..!


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; மோகன் பகான் - கோவா அணிகள் இன்று மோதல்..!
x

Image Courtesy: @IndSuperLeague

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மோகன் பகான் - கோவா அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்த லீக் ஆட்டங்கள் முடிவில் கோவா அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில் 8 ஆட்டங்களில் ஆடியுள்ள மோகன் பகான் அணி 6 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story