ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மோகன் பகான் - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இன்று மோதல்..!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மோகன் பகான் - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இன்று மோதல்..!
x

Image Courtesy: @IndSuperLeague

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் தொடங்கும் ஆட்டத்தில் மோகன் பகான் - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோத உள்ளன.

தற்போதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கேரளா அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 2 தோல்வி, 2 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

அதேவேளையில் மோகன் பகான் அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 1 டிரா, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story