ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
x

Image Courtesy: @mohunbagansg

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் மோகன் பகான் - ஐதராபாத் அணிகள் ஆடின.

இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மோகன் பகான் அணி கோல் அடித்து அசத்தியது. மோகன் பகான் தரப்பில் அனிருத் தாப்பா 12வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் மோகன் பகான் அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது.

தொடர்ந்து நடைபெற்ற 2ம் பாதி ஆட்டத்தில் பதில் கோல் திருப்ப ஐதராபாத் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவிலை. இறுதியில் இந்த ஆட்டத்தை 2-0 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி கைப்பற்றியது.


Next Story