ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஒடிசா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஒடிசா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @IndSuperLeague

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

புவனேஸ்வர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் புவனேஸ்வரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கேரளா அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 2 தோல்வி, 2 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 12 ஆட்டத்தில் ஆடியுள்ள ஒடிசா அணி 7 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ள அணிகள் இன்று மோதுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story