ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி ஒடிசா அபார வெற்றி..!


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி ஒடிசா அபார வெற்றி..!
x

Image Courtesy: @OdishaFC

இன்று இரவு 8 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - எப்.சி. கோவா அணிகள் மோத உள்ளன.

புவனேஸ்வர்,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒடிசா 4-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - எப்.சி. கோவா அணிகள் மோத உள்ளன.


Next Story