பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு வெளியேற மெஸ்சி முடிவு - பயிற்சியாளர் தகவல்


பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு வெளியேற மெஸ்சி முடிவு - பயிற்சியாளர் தகவல்
x

பி.எஸ்.ஜி.-யை விட்டு மெஸ்சி விலகுவதை பயிற்சியாளர் கிறிஸ்டோபர் கேல்டியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாரீஸ்,

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் 35 வயதான லயோனல் மெஸ்சி பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அண்மையில் அவர் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி சவுதிஅரேபியாவுக்கு சென்று வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு 2 வாரங்கள் விளையாட அந்த அணி நிர்வாகம் தடை விதித்தது. இதனால் கடும் அதிருப்திக்குள்ளான மெஸ்சி, பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு வெளியேறும் முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் அவர் பி.எஸ்.ஜி.-யை விட்டு விலகுவதை பயிற்சியாளர் கிறிஸ்டோபர் கேல்டியர் உறுதிப்படுத்தியுள்ளார். 'இந்த சீசனுடன் மெஸ்சி பி.எஸ்.ஜி. கிளப்பில் இருந்து வெளியேறுகிறார். கிளர்மோன்டுக்கு எதிரான நாளைய ஆட்டமே பி.எஸ்.ஜி.-க்காக அவர் விளையாடப் போகும் கடைசி போட்டியாகும். கடைசி ஆட்டம் என்பதால் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிக அளவில் இருக்கும் என்று நம்புகிறேன். கால்பந்து உலகின் சிறந்த வீரருக்கு பயிற்சி அளித்தது எனக்கு கிடைத்த கவுரவம்.' என்று கேல்டியர் குறிப்பிட்டார். மெஸ்சி இந்த கிளப்புக்காக இதுவரை 74 ஆட்டங்களில் விளையாடி 32 கோல்கள் அடித்துள்ளார்.


Next Story