சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி: 54 ஆண்டுக்கு பிறகு வென்றது கர்நாடகா


சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி: 54 ஆண்டுக்கு பிறகு வென்றது கர்நாடகா
x

54 ஆண்டுக்கு பிறகு கர்நாடக அணி வென்ற முதல் சந்தோஷ் கோப்பை இதுவாகும்.

ரியாத்,

76-வது சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியின் நாக்-அவுட் சுற்று முதல்முறையாக வெளிநாட்டில் சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் மேகாலயா-கர்நாடகா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில் கர்நாடகா 3-2 என்ற கோல் கணக்கில் மேகாலயாவை தோற்கடித்து மகுடம் சூடியது.

கர்நாடகா அணியில் சுனில்குமார் (2-வது நிமிடம்), பெகே ஓரம் (19-வது நிமிடம்), ராபின் யாதவ் (44-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.

54 ஆண்டுக்கு பிறகு அதாவது 1968-69-ம் ஆண்டுக்கு பிறகு கர்நாடகா உச்சிமுகர்ந்த முதல் சந்தோஷ் கோப்பை இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அந்த மாநிலம் (முன்பு மைசூரூ பெயரில் பங்கேற்றது) இந்த கோப்பையை வெல்வது இது 5-வது முறையாகும். நடப்பு தொடரில் தமிழக அணி லீக் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


Next Story