மெஸ்சிக்கு சவுதிஅரேபியாவைச் சேர்ந்த அல்-ஹிலால் கிளப் அழைப்பு


மெஸ்சிக்கு சவுதிஅரேபியாவைச் சேர்ந்த அல்-ஹிலால் கிளப் அழைப்பு
x

தங்கள் அணியில் இணைந்து விளையாடும்படி சவுதிஅரேபியாவைச் சேர்ந்த அல்-ஹிலால் கிளப் மெஸ்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பாரீஸ்,

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி சவுதிஅரேபியா சென்று வந்ததால் அதிருப்திக்குள்ளான அந்த கிளப் அவருக்கு 2 வாரம் விளையாட தடை விதித்தது. இதனால் கோபமடைந்துள்ள மெஸ்சி, இந்த சீசனுடன் பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் அவரை அடுத்த சீசனில் இருந்து தங்கள் அணியில் இணைந்து விளையாடும்படி சவுதிஅரேபியாவைச் சேர்ந்த அல்-ஹிலால் கிளப் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக அந்த கிளப் ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.3,250 கோடி அவருக்கு கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மேலும் சில கிளப்புகளும் மெஸ்சியை இழுக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story