கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த வீரர்!


கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த வீரர்!
x

image courtesy; AFP

தினத்தந்தி 13 Nov 2023 10:38 AM IST (Updated: 13 Nov 2023 10:49 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2019ஆம் ஆண்டு ரபேலுக்கு இதய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அக்ரா,

கானா நாட்டைச் சேர்ந்த சர்வதேச கால்பந்து வீரர் ரபேல் டுவாமேனா, மைதானத்திலேயே சுருண்டு விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்பேனியாவில் நடந்த எக்னாடியா-பார்டிஜானி இடையிலான லீக் ஆட்டத்தின்போது ரபேல் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு ரபேலுக்கு இதய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story